• “உலகிற்கே தலைமையேற்கும் இந்தியாவை உருவாக்க வேண்டும்” பிரதமர் நரேந்திர மோடிக்கு டாக்டர் பாரிவேந்தர் வாழ்த்து

    கடந்த 2014 – ம் ஆண்டு மே 26 -ம் தேதி நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற திருநரேந்திரமோடி அவர்களின் தலைமையில்மத்திய அரசு பொறுப்பேற்று வெற்றிகரமாக இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 

    திரு.நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு நவீன இந்தியாவை உருவாக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்களை நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளது.அவற்றில்குப்பைகளே இல்லாத இந்தியாவை உருவாக்கும் – தூய்மை இந்தியா திட்டம்வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் விதத்தில்  அனைத்துத்தரப்பட்ட மக்களும் சிறு – குறு தொழில் தொடங்க முத்ரா திட்டம்,  நாட்டிலுள்ள அனைவருக்கும் வங்கியில் கணக்கு  இருக்க மக்கள் நிதி திட்டம்நேரடி பணப் பரிமாற்றத்தின் மூலம் பயணாளிகளுக்கு அரசே நேரடியாக செயல்படுத்தும எரிவாயு மானியத் திட்டம்நாட்டின் உற்பத்தித் துறையை புத்துயிர் பெறச்செய்ய மேக் இன் இந்தியா திட்டம்பிறப்பு முதல் இறப்பு வரை நவீன தொழில் நுட்பத்தை கொண்ட டிஜிட்டல் இந்தியா திட்டம்அடிப்படை தேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கச் செய்ய ஸ்மார்ட் சிட்டி திட்டம்  என எண்ணற்ற திட்டங்களை மிகச்சிறப்பாக மத்திய அரசு செயல்படுத்தி வருவது பாராட்டுக்குறியதாகும். 

    மேலும்இதுபோன்ற திட்டங்களால் ஒவ்வொரு இந்தியனும் தங்களின் எதிர்காலத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டு உழைத்துநாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்லும் அதே வேளையில்மத்திய அரசு தமிழகத்தின் மீது அதிக அக்கறை காட்ட வேண்டும்குறிப்பாக தமிழக மீனவர் பிரச்சனைகாவிரி -முல்லை பெரியார் நதிநீர் பங்கீட்டு பிரச்சனை ஆகியவற்றில் மத்திய அரசு நேரடியாக தலையிட வேண்டும். 

    அடுத்துவரும் ஆண்டுகளிலும் திரு.நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு முன்மாதிரியான திட்டங்களை முன்னெடுத்து அதனை விரைந்து முடித்து செயல்படுத்தி பொருளாதாரம் – அறிவியல் – விவசாயம் –தொலைத்தொடர்பு போன்ற அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்துஇந்தியா உலகிற்கே தலைமையேற்று வழிநடத்தும் நாடாகவும் விளங்கிட வேண்டுமென கூறி,பிரதமர் மோடி மற்றும் அவரின் அமைச்சரவைக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.