• பருப்பு வகைகளின் பற்றாக்குறையை போக்க இறக்குமதியை கைவிட்டு உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் - மத்திய மாநில அரசுகளுக்கு டாக்டர் பாரிவேந்தர் கோரிக்கை

    வளர்ந்த நாடுகளில் ஒவ்வொரு விளை பொருட்களின் உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி – இறக்குமதி ஆகியவை மிகத் துல்லியமாக கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையிலேயே பல்வேறு பயிர்வகைகளின் விலை மற்றும் சாகுபடி பரப்பளவை அரசு நிர்ணயிக்கின்றது.

    ஆனால் நமது நாட்டில் மக்கள் தொகை பெருக்கம் மற்றும் உணவு பொருட்கள் உற்பத்தி குறித்து அரசு முறையான புள்ளி விவரங்களை சேகரிப்பதில்லை. மேலும் பயிரிடும் பரப்பளவையும் அதன் மகசூலையும் கணக்கெடுப்பதில்லை. இதன் காரணமாக தற்போது உள்நாட்டு பருப்பு உற்பத்திக்கும் – தேவைக்கும் இடையே ஏறக்குறைய முதல் 3.5 மில்லியன் டன்கள் வரை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆண்டிற்கு பல லட்சம் டன் பருப்பு வகைகளை மியான்மர் – கென்யா – எத்தியோப்பியா - கனடா – அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.

    தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 1 கிலோ பருப்பு 30 ரூபாய் என்கிற விலையில்மாதந்தோறும் 21 ஆயிரம் டன் பருப்பு வகைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றனஇவை அனைத்தும் ஆண்டிற்கு 1500கோடி ரூபாய் அளவிற்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாகும்.

    எனவே இறக்குமதியை படிப்படியாக குறைத்துபருப்பு வகைகளின் உற்பத்தியை நம் நாட்டிலேயே அதிகரிக்கும் நோக்கில்விவசாயிகளுக்கு கடனுதவி – புதிய தொழில்நுட்பம் – குறைந்தபட்ச ஆதாரவிலை ஆகியவற்றை அரசு நிர்ணயித்து அமல்படுத்த வேண்டும் என மத்திய –மாநில அரசுகளை கேட்டுக்கொள்கின்றேன்.