• மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தின் பெயரை ‘தமிழ்நாடு உயர்நீதிமன்றம்’ என பெயர் மாற்றம் செய்த தமிழக முதல்வருக்கு டாக்டர் பாரிவேந்தர் பாராட்டு

    இன்று (01.08.2016) தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கொண்டு வந்த தனிநபர் தீர்மானம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்சென்னையில் உள்ள ‘மெட்ராஸ் உயர்நீதிமன்றம்’ என்கிற பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம்’  என பெயர் மாற்றம் செய்யவேண்டிஇத்தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா அவர்கள் முன்மொழிந்துள்ளார்இதனை நிறைவேற்றித் தந்த தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு என் பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஆரம்பத்தில் ‘சென்னை மாகாணம்’ எனவும், ‘மெட்ராஸ் ஸ்டேட்’ எனவும் அழைக்கப்பட்டு வந்த நம் மாநிலம், 1967-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வர் பொறுப்பேற்றவுடன், ‘தமிழ்நாடு’ எனவும், பின்னர், 1996-ம் ஆண்டு ‘மெட்ராஸ்’ மாநகர் ‘சென்னை’ மாநகர் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

    எனினும் உயர்நீதிமன்றம் மட்டும் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் (Madras High Court) என்றே அழைக்கப்பட்டு வந்தது. சென்னையை தலைமையிடமாகவும், மதுரையில் கிளையும் கொண்டு செயல்பட்டு வரும் உயர்நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என அழைப்பதே பொறுத்தமானதாகும். அதன்படி இப்பெயர்மாற்றத்திற்கு, தமிழக சட்டப்பேரவையில் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்து, அதனை நிறைவேற்றியுள்ள தமிழக முதல்வருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஏற்கனவே ‘சென்னை உயர்நீதிமன்றம்’ என பெயர்மாற்றம் செய்ய வரைவுத் தீர்மானம் கொண்டுவந்துள்ள மத்திய அரசுதமிழக அரசின் சார்பில் அனுப்பி வைக்கப்படும் இத்தீர்மானத்தினை ஏற்று, ‘தமிழ்நாடு உயர்நீதிமன்றம்என பெயர் மாற்றம் செய்து உத்தரவிட விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.