• பிரபல கதாசிரியர் – தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் மறைவிற்கு - டாக்டர் பாரிவேந்தர் இரங்கல்

    தமிழ் திரையுலகின் மிகச் சிறந்த வசனகர்த்தாவாகவும்திரைக்கதை ஆசிரியராகவும் விளங்கியவர் மறைந்த பஞ்சு அருணாச்சலம் அவர்கள்இசைஞானி இளையராஜாவை தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்ததோடு, ரஜினிகாந்த்,  கமல்ஹாசன் போன்ற முன்னணி நட்சத்திரங்களை ஊக்குவித்து அவர்களை வெற்றிநாயகர்களாக வலம்வரச் செய்தவர் பஞ்சு அருணாச்சலம் அவர்கள்.

    அனைத்திற்கும் மேலாககவியரசு கண்ணதாசனின் உதவியாளராக பணியாற்றிஅவரின் பல்வேறு படைப்புக்களை எழுத்து வடிவில் வெளிக்கொண்டுவர காரணமாக இருந்தவர்மிகச்சிறந்த கவிஞர் – கதாசிரியர் – பாடலாசிரியர் – தயாரிப்பாளர் - இயக்குநர் போன்ற பன்முகம் கொண்ட பஞ்சு அருணாச்சலம் அவர்களின் மறைவுதமிழ் திரையுலகில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதுஅவரின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

    அவரை இழந்து வாடும் திரையுலகினர் – ரசிகர்கள் மற்றும் அவரின் குடும்பத்தினர் ஆகியோர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தினையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.