• ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவிற்கு டாக்டர் பாரிவேந்தர் வாழ்த்து

    பிரேசிலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 31- வது ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் சார்பில் விளையாடிய ஆந்திராவைச் சார்ந்த பி.வி.சிந்து ஒட்டுமொத்த இந்தியர்களின் ஆதரவோடும் –வாழ்த்துக்களோடும் நேற்று விளையாடினார். எப்படியும் தங்கப்பதக்கத்தினை பெற்றுவிடுவார் என்கிற நம்பிக்கையுடன் நாமும் இருந்தோம்.  அவரின் நேர்த்தியான ஆட்டம் உலகிலுள்ள அனைத்து விளையாட்டு ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.  தங்கப் பதக்கம் பெறுகின்ற அளவிற்கு போராடி விளையாடினாலும், வெள்ளிப் பதக்கம் மட்டுமே கிடைத்துள்ளது. எனினும் அவரின் தன்னம்பிக்கைக்கும் - அயராத உழைப்பிற்கும் நமது பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

    அதேபோல், மகளிர் பிரிஸ்டைல் மல்யுத்த போட்டியில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சாக்‌ஷி மாலிக் வெண்கல பதக்கத்தை பெற்றுள்ளார்.ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக் என்பது பெருமைக்குரியதாகும்.

    ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்ற பி.வி.சிந்து மற்றும் வெண்கல பதக்கத்தை வென்ற சாக்‌ஷி மாலிக்  ஆகியோருக்கு இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் – இனி வரும் போட்டிகளில் இந்திய வீரர் – வீராங்கனைகள் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடி நம் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் நோக்கில், தங்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை வெல்லவேண்டும் என்ற என்னுடைய அவாவினையும் – வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.