• இந்திய ஜனநாயக கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் புதிய தலைவர் தேர்வு

    இந்திய ஜனநாயக கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று (05.02.2017) பிற்பகல் 2.00 மணியளவில் திருச்சியிலுள்ள SRM ஹோட்டலில் நடைபெற்றது.

    வரலாற்று சிறப்பு மிக்க இச்செயற்குழு கூட்டத்திற்கு கட்சியின் செயல்தலைவர் திரு.ரவிபச்சமுத்து அவர்கள் தலைமை தாங்கினார். இதில் மாநில – மண்டல - மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    இச்செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் சிறப்பு  தீர்மானமாக கட்சியின் செயல்தலைவராக இருந்த திரு.ரவி பச்சமுத்து அவர்கள் ஒட்டுமொத்த செயற்குழு உறுப்பினர்களின் முழு ஆதரவோடு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான சிறப்பு தீர்மானத்தை கட்சியின் பொதுச்செயலாளர் திரு. P.ஜெயசீலன் அவர்கள் முன்மொழிய, அதனை கட்சியின் இணை பொதுச்செயலாளர் திரு. R.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வழிமொழிந்தார். பின் செயற்குழு உறுப்பினர்களின் பலத்த கரகோஷத்தின் மத்தியில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    ஏற்கனவே கட்சியின் தலைவராக இருந்த திரு.கோவைத்தம்பி அவர்கள் அப்பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டதால், இந்திய ஜனநாயக கட்சியின் புதிய தலைவராக திரு.ரவி பச்சமுத்து அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியின் புதிய தலைவருக்கு மாநில – மண்டல - மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.

    பின்னர் பல்வேறு பொது தீர்மானங்கள் இச்செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டன.  அவை பின்வருமாறு.. 

     

    1. இந்திய அரசியலில் மிகப்பெரும் ஆளுமையாக விளங்கியவரும், தமிழகமக்களின் அன்பிற்கு பாத்திரமானவருமான முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கும், மூத்த பத்திரிகையாளரும்நாடாளுமன்ற மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான திரு.சோ.ராமசாமி அவர்களின் மறைவிற்கும் இச்செயற்குழு தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.
    2. கட்சியின் வர்த்தகர் அணி செயலாளர் பொறுப்பில் திறம்பட பணியாற்றி,நமது உத்தமத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் – செயல்தலைவர் இளையவேந்தர் ஆகியோரின் அன்பிற்குறியவராகவும்தலைமையில் உள்ள அனைத்து நிர்வாகிகளுடனும்மாவட்ட பொறுப்பாளர்களுடனும் நல்ல நட்புடன் பழகி வந்தவருமான திரு.K.C.T.மனோகரன் அவர்களின் அகாலமரணத்திற்கும்திருச்சி மாவட்ட தலைவர் திரு.பரந்தாமன் அவர்களின் தந்தையார் திரு.பன்னீர்செல்வம் உடையார் அவர்கள் காலமானதற்கும் இச்செயற்குழு தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.
    3. கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து திரு.கோவையார் அவர்கள் விலகிவிட்ட காரணத்தினால், தலைவர் பொறுப்பு நிரப்பப்படாமலேயே இருந்தது. இதனை கருத்தில் கொண்டு நம் உத்தமத்தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அவர்களும் மற்றுமுள்ள மூத்த தலைவர்களும் கலந்து ஆலோசித்து, நம் செயல் தலைவர் இளையவேந்தர் அவர்கள் கட்சியின் லைவர் பொறுப்பினை ஏற்க வேண்டும் என தீர்மானித்துள்ளனர். அதனைநிறைவேற்றும் வகையில், நம் செயல்தலைவர் உயர்திரு. இளையவேந்தர் அவர்கள், “தலைவர்பொறுப்பினை ஏற்றுநம் கட்சியின் செயல்பாடுகளை செம்மைப்படுத்த வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக்கொள்கின்றது.
    4. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்குவிதிக்கப்பட்டிருந்த தடையினை நீக்கிசட்ட ரீதியாக அப்போட்டிகளை நடத்த மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்தித்து இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கண்ட தமிழக முதல்வர் மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், அவசரச்சட்டம் நடைமுறைக்கு வர, அனைத்து ஒத்துழைப்புகளையும் அளித்த மத்திய அரசுக்கும் இச்செயற்குழு நன்றியினையும் பாரட்டுதலையும் தெரிவித்துக்கொள்கின்றது
    5. கடும் வறட்சியால் பாதிப்படைந்துள்ள காவிரி பாசன மாவட்ட விவசாயிகளின் பயிர்களுக்கு போதிய நிவாரணம் அளிக்க வேண்டியும், தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வறட்சியைசமாளிக்க, விவசாயிகளுக்கான நிவாரணப் பணிகளை முறைப்படுத்தவும் தமிழக அரசை இச்செயற்குழு வலியுறுத்துகின்றது.
    6. நமது கட்சியின் விதிகளின்படி ஆண்டிற்கு ஒருமுறை பொதுக்குழுகூட்டப்பட வேண்டும். அதன்படி இவ்வாண்டிற்கான பொதுக்குழு கூட்டப்படும் நாள் குறித்தும், பொதுக்குழுவை எங்கு நடத்துவது என்பது குறித்தும் முடிவெடுத்து அறிவிக்க, கட்சியின் உயர்நிலைக் குழுவிற்கு இச்செயற்குழு பரிந்துரைக்கின்றது.
    7. நமது கட்சியின் தலைவராகவும்முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த திரு. கோவையார் அவர்கள், உடல் நிலை சரியில்லாத காரணத்தினால்கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிவிட்டார். தலைவராக இருந்து சிறப்புற பணியாற்றியமைக்கு திரு. கோவையார் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்வதுடன்அவரின் மேலான ஆலோசனைகளை கட்சியின் வளர்ச்சிக்கு தொடர்ந்து அளித்திட வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக்கொள்கின்றது.