• குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை முழுவதுமாய் பயன்படுத்த வேண்டும் - டாக்டர் பாரிவேந்தர் வலியுறுத்தல்

    கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத மாபெரும் வறட்சியை தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கிறதுசென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் குடிநீர் தட்டுப்பாட்டால் தத்தளித்துக் கொண்டிருக்கிறதுநிலத்தடி நீர் மட்டம் ஓரளவிற்கு உயர்ந்திருக்கும் மாவட்டங்களில் கூட வறட்சியின் காரணமாக குடிநீர் என்பது கானல் நீராக மாறிக்கொண்டிருக்கிறது.

    போதிய மழையும் – பெய்கின்ற மழைநீரை தேக்கிவைத்து முறைப்படி பாசனம் செய்கின்ற கட்டுமான வசதியும் இல்லாத காரணத்தால் விவசாய நிலங்களே வெடித்து பாலைநிலங்களாக உருமாறும் அபாயம் ஏற்பட்டு வருகின்றதுஇந்நிலையில் குடிநீர் இன்றி அனைத்து குடும்பங்களும் தவித்து வருவதைக் கண்கூடாக காண்கிறோம்.

    சென்னையை பொருத்தவரை குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் பூண்டிபுழல்,செம்பரம்பாக்கம்சோழவரம் ஆகிய ஏரிகள் வறண்டு கிடக்கின்றனவடகிழக்கு பருவமழை பொய்த்ததாலும் சென்னை மாநகரே குடிநீர் பஞ்சத்தின் பிடியில் சிக்கிக் கிடக்கின்றது.

    இந்நிலைமையினை கருத்தில் கொண்டுதமிழகத்தில் உள்ள 39 மக்களவை உறுப்பினர்களும், 18 மாநிலங்களவை உறுப்பினர்களும்அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியினை குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஒதுக்கவேண்டும்ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்குமான ரூபாய் 2.5 கோடி மேம்பாட்டு நிதியினை அவர்களின் தொகுதிகுட்பட்ட பகுதிகளில் உடனடியாக குடிநீர்க் குழாய்களை அமைக்கவும்ஆழ்துளை கிணறுகள் தோண்டவும்,குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளில் அதனை ஏற்படுத்தித்தரவும் வேண்டும்.

     இதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியான 5 கோடி ரூபாயில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முழுவதுமாய் ஒதுக்க வேண்டும்இதனை அவசர – அவசிய நிகழ்வாகக் கருதிதங்கள் தொகுதி மேம்பாட்டு நிதி முழுவதையும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மட்டுமே ஒதுக்க வேண்டும் என தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கின்றேன்.