• IJK நிறுவனர் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அவர்களின் பிறந்த நாள் விழா வைகோ – திருமாவளவன் நேரில் வாழ்த்து

    இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அவர்களின் பிறந்த நாள் விழா நேற்று (24.08.2017)மிகச் சிறப்பான முறையில் கட்சியினரால் கொண்டாடப்பட்டது. சென்னை ராமாபுரம் ஜீவன் ஜோதி மஹாலில் நடைபெற்ற இவ் விழாவிற்கு கட்சியின் தலைவர் திரு. ரவி பச்சமுத்து அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார்.

    இப்பிறந்த நாள் விழாவிற்கு மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்களும், விசிக தலைவர் திரு. தொல்.திருமாவளவன் அவர்களும், மாநில பாஜக துணைத்தலைவர் திரு.பி.டி.அரசகுமார் அவர்களும் நேரில் வந்திருந்து டாக்டர் பாரிவேந்தர் அவர்களை வாழ்த்திப்பேசினார்கள். நிறைவாக, டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் ஏற்புறை ஆற்றினார்.

    மற்றும், கட்சியின் பொதுச்செயலாளர் திரு.பி.ஜெயசீலன், பொருளாளர் திரு.ஜி.ராஜன், இணை பொதுச்செயலாளர் திரு.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, முதன்மை அமைப்புச்செயலாளர் திரு.எஸ்.எஸ்.வெங்கடேசன், கொள்கை பரப்புச் செயலாளர் திரு.எம்.எஸ்.ராஜேந்திரன், பாமுச பொதுச்செயலாளர் திரு.சத்தியநாதன், ஐஜேகே இளைஞரணி செயலாளர் நெல்லை ஜீவா உட்பட கட்சியின் நிர்வாகிகள் பலர் வாழ்த்திப்பேசினர். இறுதியாக தஞ்சை மேற்கு மாவட்ட தலைவர் திரு.சிமியோன் சேவியர் ராஜ் நன்றியுரை ஆற்றினார்.