• நாளை தஞ்சை ரயில்நிலையம் அருகே IJK சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - டாக்டர் பாரிவேந்தர் அறிவிப்பு

    இந்திய ஜனநாயகக் கட்சியின் தஞ்சாவூர் மேற்கு மாவட்டம் சார்பில் தஞ்சை ரயில்நிலையம் அருகில்,  நாளை(31.10.2018) காலை 10.00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அப்பகுதி மக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இக்கண்டன ஆர்ப்பாட்டம், மாவட்டத் தலைவர் எஸ்.சிமியோன் சேவியர் ராஜ் தலைமையிலும்,மாவட்ட செயலாளர் வினோபா, மாவட்ட பொருளாளர் கே.முத்துக்கிருஷ்ணன், பூதலூர் ஒன்றியத் தலைவர்பி.எஸ்.திருமாறன், தஞ்சை ஒன்றியத் தலைவர் வி.எஸ்.முருகானந்தம், திருவையாறு ஒன்றியத் தலைவர் சி.அன்பழகன், மாநகரத் தலைவர் எ.ஜஸ்டின், பா.மு.ச மாவட்ட செயலாளர் கே.ராஜகோபால், மாவட்ட மகளிரணிச் செயலாளர் ஆர்.சீதாலட்சுமி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

    அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு 2015-2016 மற்றும் 2016-2017 ஆம் ஆண்டு கொள்முதல் செய்த கரும்புக்கு முறையே டன் ஒன்றுக்கு பாக்கித் தொகை ரூ.900/- வீதம் நிலுவைத் தொகை மொத்தம் ரூ.30 கோடி உள்ளது. இந்த நிலுவைத் தொகை முழுவதையும் வரும் தீபாவளிக்குள் விவசாயிகளுக்கு பாக்கியின்றி வழங்கவேண்டும் – நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2000/- ரூபாயும், கொள்முதல் நிலையங்களில் சாக்கு, சணல் தட்டுப்பாடின்றியும் வழங்கவேண்டும் – திருவையாறு புறவழிச் சாலையை உடனே அமைத்திட வேண்டும் – பொதுமக்களை மிகவும் பாதிப்படையச் செய்யும் பெட்ரோல், டீசல் விலையை GST-க்குள் கொண்டுவரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவரும் பொதுச்செயலாளருமான பி.ஜெயசீலன், முதன்மை அமைப்புச் செயலாளர் எஸ்.எஸ்.வெங்கடேசன், கொள்கை பரப்புச் செயலாளர் எம்.எஸ்.ராஜேந்திரன், உள்ளிட்ட மாநில – மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.

    தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய ஜனநாயகக் கட்சியின் நிர்வாகிகளும் – உறுப்பினர்களும் – பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டு இக்கோரிக்கைகள் நிறைவேறவும் –கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றிபெறவும் ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.