• பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் - டாக்டர் பாரிவேந்தர் M.P. அவர்களின் ஆயுதபூஜை வாழ்த்து

    நவராத்திரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விழாக்களில் ஒன்று. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும், அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதி  தேவியையும் வழிபடுகிறோம். இறுதி நாளில் சரஸ்வதியை வழிபாடு செய்வதால் அந்த நாளை சரஸ்வதி பூஜை என்ற பெயரில் கொண்டாடுகின்றோம்.

    கல்விக்கு அதிபதியாக விளங்குபவர் சரஸ்வதி, அவரை தினமும் வழிபாடு செய்தாலும், அவருக்கான சிறப்பு நாளாக சரஸ்வதி பூஜை இருக்கிறது. இந்த நாளில் கலைகளில் தேர்ச்சி பெறவும் ஞானம் வேண்டியும், நினைவாற்றல் வரப்பெறவும் படிப்பில் நல்ல நிலையை எட்டவும் அனைத்து தரப்பினரும் வழிபாடு செய்வார்கள்.

    ஒரு மனிதனுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ, அதேபோல அவர் செய்யும் தொழிலும் முக்கியத்துவம் பெற்றது. செய்யும் தொழிலே தெய்வம் என்பது பழமொழி. எனவே நாம் செய்யும் தொழிலையும் அதற்கான கருவிகளையும் இறைவன் முன்பாக வைத்து வழிபடும் முறையும் இந்த நாளில் பின்பற்றப்படுகிறது. எனவே இந்த தினம் ஆயுதபூஜை, என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

    இந்த நல்ல நாளில் இந்திய தேசத்திலும் – தமிழகத்திலும் தொழில் வளமும், கல்வி மற்றும் செல்வமும் பெருகி,  மக்கள் எல்லா வளமும் நலமும் பெற இந்த ஆயுதபூஜை நன்நாளில் வாழ்த்துகின்றேன்.

    வாழ்த்துக்களுடன்,

    டாக்டர் பாரிவேந்தர் M.P

    பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி.