• தமிழகம் மேலும் வளர்ச்சியடையவும் பொருளாதார நிலையில் உயரவும் பிறக்கவுள்ள ‘சோபகிருது’ ஆண்டு சுபமான ஆண்டாக இருக்கட்டும் டாக்டர் பாரிவேந்தர் MP அவர்களின் தமிழ்புத்தாண்டு வாழ்த்துச்செய்தி

    ‘பிரபவ’ ஆண்டில் தொடங்கி ‘அட்சய’ ஆண்டு வரை தமிழ் ஆண்டுகள் அறுபது ஆண்டுகளைக் கொண்டச் சுற்றுகளையுடையது. இந்த வரிசையில் 37-வதாக நாளை பிறக்கவுள்ள புத்தாண்டு ‘சுபகிருத’ ஆண்டு நிறைவடைந்து ‘சோபகிருது’ ஆண்டு தொடங்ககவுள்ளது.

    சோபகிருது வருடத்தில் அகில உலகமெங்கும் உள்ள தொன்மையான நாடுகள் செழிப்படையும் – மனிதர்களிடம் உள்ள தீய குணங்களான பொறாமை – கோபம் – ஆணவம் போன்றவை அகன்று நல்ல பண்புகள் ஏற்படும். மங்கலம் உண்டாகும். இயற்கையும் அதற்கேற்றார்போல் மழைபொழிந்து நாடு செழிப்படையும் என தமிழ் பஞ்சாங்கத்தில் உள்ளது

    புத்தாண்டு எப்போதும் நம்பிக்கையுடன் தான் பிறக்கிறது. மலரும் இப்புத்தாண்டு தமிழக மக்களுக்கு உயரிய வாழ்வையும், நீங்காத வளங்களையும், நிறைவான நலன்களையும் வழங்கும் ஆண்டாக அமைந்து,  வேளாண்மை செழித்து, தொழில்கள் வளர்ந்து - தொழிலாளர்கள் வாழ்வாதாரம் உயர வேண்டும்; வேலை வாய்ப்பு பெருக வேண்டும்; அனைத்துப் பிரிவு மக்களும் இணைந்து செயலாற்ற வேண்டும்; இறைவனும், இயற்கையும் அதற்குத் துணை நிற்க வேண்டும். எனக்கூறி, உலகெங்கும் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் எனது இதயம்கனிந்த தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

     

     

    வாழ்த்துக்களுடன்,

    டாக்டர் பாரிவேந்தர் M.P

    பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர்.