உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற கள் விடுதலை கருத்தரங்கில் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சி! தமிழ்நாடு விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் இணைந்து நடத்திய இந்த நிகழ்வில், தமிழக பாஜக தலைவர் சகோதரர் அண்ணாமலை அவர்கள் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் சகோதரர் TTV தினகரன் ஆகியோருடன் கருத்துக்களை பகிர்ந்துகொண்டோம். கள்ளுக்கான தடையை நீக்க பல ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சி செய்து வரும் கள் நல்லசாமி அவர்கள், சிறப்பாக ஒருங்கிணைத்த இந்த நிகழ்வு நினைவுறும் தருணமாக அமைந்தது.