Loading...

செய்திகள்

Mar 26, 2025
News Image

இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மகனும், திரைப்பட நடிகருமான மனோஜ் அவர்களின் இறப்பு செய்தி கேட்டு ஆற்றொண்ணா துயரத்தில் இருப்பதாக இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் டாக்டர் இரவி பச்சமுத்து - இரங்கல் செய்தி

தமிழ் திரையுலகில் நடிகராகவும், துணை நடிகராவும் பல முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த மனோஜ் அவர்கள் காலாமானார் என்ற செய்தி கேட்டு ஆற்றொண்ணா துயரம் அடைந்தேன். இவரது தாஜ்மஹால், சமுத்திரம், வருஷமெல்லாம் வசந்தம், அல்லி அர்ஜுனா போன்ற படங்கள் மிகவும் கவனம் ஈர்த்த படங்கள் ஆகும். இவரது இழப்பு திரையுலகத்திற்கும், அவரது குடும்பத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. தனது அன்பு மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் ஆழந்த இரங்கலை எனது சார்பிலும் - இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பிலும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரின் ஆன்மா இறைவனடி நிழலில் இளைப்பாற இறைவனை வேண்டுகின்றேன். . ,  வருத்தங்களுடன், (டாக்டர் ரவி பச்சமுத்து) தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News