Loading...

செய்திகள்

May 29, 2025
News Image

பள்ளி ஆசிரியராகத் தனது பணியைத் துவங்கி, திரையுலகில் தனி முத்திரைப் பதித்த திரு.இராஜேஷ் அவர்களின் இழப்பு திரையுலகிற்கு பேரிழப்பு - IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து இரங்கல் -

திரைப்பட படப்பிடிப்பிற்காக தனி ஒரு கட்டிடம் கட்டிய முதல் நடிகர் – மிகச்சிறந்த பேச்சாளர் – எழுத்தாளர் என்ற சிறப்புகள் மட்டுமல்லாது, இவரின் தமிழ் உச்சரிப்பு மிகச்சிறப்பாக இருக்கும். திரைக்கதையில் நாயகனாகவும் – குணச்சித்திர பாத்திரங்களிலும் மிகச்சிறப்பாக தனது தனித்திறமையை வெளிப்படுத்தியவர் அண்ணன் இராஜேஷ் அவர்கள். 47 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வந்த நடிகர் திரு.இராஜேஷ் அவர்களின் இழப்பு திரையுலகிற்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும். நடிகர் – டப்பிங் கலைஞர் – எழுத்தாளர் – சின்னத்திரை நடிகர் என அனைத்திலுமே தனி முத்திரை பதித்த அண்ணன் இராஜேஷ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் – திரையுலகிற்கும் – ரசிகர்களுக்கும் – நண்பர்களுக்கும் எனது சார்பிலும் - இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பிலும் ஆழந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரின் ஆன்மா இறைவனடி நிழலில் இளைப்பாற இறைவனை வேண்டுகின்றேன். வருத்தங்களுடன், (டாக்டர் ரவி பச்சமுத்து) தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News