Loading...

செய்திகள்

May 12, 2025
News Image

‘தமிழ்மண்ணின் வளர்ச்சிக்கு நீங்கள் பயணிக்கும் பாதை வெற்றி பெறட்டும்’ அ.இ.அ. தி. மு. க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துச்செய்தி

புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில், கொண்ட கொள்கையில் உறுதியுடன் செயல்படுபவர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். இன்று பிறந்தநாள் காணும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கின்றேன். இந்திய ஜனநாயகக் கட்சியின் உயரிய கொள்கையான விவசாய குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் முதல்வராக வேண்டும் என்ற கொள்கை தங்களின் வாயிலாக நிறைவேறி இருப்பதும், இனி வரும் காலங்களிலும் மிகச்சிறப்பாக நிறைவேறும் என்பதில் ஐயமில்லை. தமிழ்நாடும் மக்களும் உங்களைப் போன்ற சிறந்த தலைமைத்திறனுடைய தலைவரை அடைந்திருக்கிறது என்பது பெருமை. உங்கள் சேவைகள் தொடரட்டும், தமிழ்மண்ணின் வளர்ச்சிக்கு நீங்கள் பயணிக்கும் பாதை வெற்றிபெறட்டும் என்று எனது சார்பிலும், இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பிலும் தங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ,  வாழ்த்துக்களுடன், (டாக்டர் ரவி பச்சமுத்து) தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News