நாகலந்து மாநில ஆளுநராக உள்ள இல. கணேசன் ஐயா அவர்களின் மறைவு தமிழகத்திற்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் மிகப்பெரிய பேரிழப்பு. பாஜக செயற்குழு உறுப்பினராக 28 ஆண்டுகளாகவும், பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர், தேசிய துணைத் தலைவர், மாநிலத் தலைவர் பதவிகளிலும் இருந்தவர் ஐயா இல.கணேசன் அவர்கள். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வளர்ச்சிக்காக தீவிரமாக உழைத்தார். ஆளுநராக இருந்தபோது மாநிலங்களின் கலாச்சார ஒற்றுமையை வலியுறுத்தி பல உரைகளை நிகழ்த்தியவர். மேலும், சமூக மற்றும் அரசியல் ஒருமைப்பாட்டை பேணும் விதமாக செயல்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அரசியல் உலகில் மட்டுமன்றி இலக்கிய உலகிலும் சிறந்து விளங்கியவர் ஐயா இல. கணேசன் அவர்கள். இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும், தனிநபர் தாக்குதல் இன்றியும், கண்ணியக்குறைவாக பேசுவதை தவிர்த்தும், மேலும், கொள்கையில் உறுதியாக இருந்தாலும், அமைப்புக்கு அப்பாற்பட்டு எல்லோருடனும் நட்போடு பழகுபவர் ஐயா கணேசன் அவர்கள். இவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் - பாரதிய ஜனதா கட்சியின் சொந்தங்களுக்கும் எனது சார்பிலும், இந்திய ஜனநாயகக் கட்சி சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.. வருத்தங்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக்கட்சி(IJK)
Powered by iPOT Technologies