மக்களின் நலனுக்காக தன்னலமின்றி பாடுபட்டு, அரசியலில் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் தன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி வருபவர், மேலும் தமிழக அரசியலின் சிறந்த தலைவராக செயல்பட்டு வருபவர் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள். அரசியல் துறையில் அனுபவமும், பணிவும், மக்களோடு இணைந்த பண்பும் கொண்ட நயினார் நாகேந்திரன் அவர்கள், மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறார். தமிழகத்தின் வளர்ச்சிக்கும், இளைய தலைமுறையின் முன்னேற்றத்திற்கும் அவர் காட்டும் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. இன்று அவரது பிறந்தநாளையொட்டி, இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பிலும் மற்றும் எனது சார்பிலும் அண்ணன் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தற்போது அவர் மேற்கொண்டுள்ள, “தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்” என்ற அரசியல் பயணம் சிறந்து, இன்னும் பல வெற்றிகளையும், மக்களின் அன்பையும் பெற்று, நீண்ட ஆயுளும் - ஆரோக்கியத்துடனும், உற்சாகத்துடனும் மக்களுக்காக பணியாற்ற இறைவன் அருள் புரியட்டும். வாழ்த்துக்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies