Loading...

செய்திகள்

Oct 19, 2025
News Image

அகல்தீபங்களின் வரிசை ஒளியால் அறியாமை எனும் இருள்கிழித்து, அன்பெனும் சுடர் பாய்ச்சி அறத்தின் வெற்றிக்கு புதுப்பாதை வகுக்கட்டும். IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்களின் தீபாவளி திருநாள் வாழ்த்துச்செய்தி

“யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற மனிதநேய ஒருமைப்பாட்டை வாழ்க்கையில் கடைப்பிடித்து நம்மை வாழவைக்க, தனிமனித சமூகத்தின் நல்வாழ்வைக் கருதி, நம் முன்னோர்களால் மிகுந்த சிந்தனையுடன் ஏற்படுத்தப்பட்டவைதான் பண்டிகைகள். இன்று ஒளியின் திருநாள். தீபாவளி நம் வாழ்க்கையில் நன்மையும் நம்பிக்கையும் பரப்பும் மகிழ்ச்சியான திருநாளாகும். இருளை அகற்றி ஒளி பரப்பும் இந்த நாளில், ஒவ்வொரு குடும்பமும் மகிழ்ச்சியுடன் ஒளிரட்டும் என என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தீபாவளி நம் சமூகத்தில் தீமை அகன்று, ஒற்றுமை, அன்பு, பகிர்வு ஆகிய உயர்ந்த பண்புகளை நினைவூட்டும் நாள். நாம் அனைவரும் ஒன்றுபட்டு நம் தேசத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்பது என் வேண்டுகோள். போராட்டம் எதுவாக இருந்தாலும், நம் மனதில் நம்பிக்கையின் தீபம் எப்போதும் அணையக்கூடாது. நம் ஊர் - நம் மக்கள் - நம் நாடு, வளர்ச்சியின் ஒளியில் பிரகாசிக்கட்டும். அகல்தீபங்களின் வரிசை ஒளியால் அறியாமை எனும் இருள்கிழித்து, அன்பெனும் சுடர் பாய்ச்சி அறத்தின் வெற்றிக்கு புதுப்பாதை வகுக்கட்டும். இத்தீபாவளி நாளில் அனைத்து மக்களும் செழிப்புடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வில் முன்னேற வேண்டும் எனக்கூறி, தீபாவளி திருநாளை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடி மகிழும் அனைத்து சகோதர - சகோதரிகளுக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில், என் மனமார்ந்த ‘தீபாவளி’ திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்த்துக்களுடன் டாக்டர் ரவி பச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News