Loading...

செய்திகள்

Nov 03, 2025
News Image

மகளிர் 50 ஓவர் உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி வீராங்கனைகளுக்கு - IJK நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் வாழ்த்து

நேற்று மும்பை டாக்டர் DY. படேல் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் 50 ஓவர் உலக கோப்பை இறுதிபோட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி, இந்திய அணி வெற்றிபெற்று, முதல் முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றி இந்திய மகளிர் அணி வரலாற்று சாதனை படைத்து இந்தியாவிற்கு வெற்றியையும் – பெருமையும் சேர்த்துள்ளது. உலக கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! இறுதிப்போட்டியில் வீராங்கனைகள் அனைவரின் ஒருமித்த பங்களிப்பும் - அவர்களின் மன உறுதி மற்றும் தண்னம்பிக்கையும் மிகவும் பாராட்டுக்குரியது. தொடர் ஆரம்பித்தது முதல், இந்திய வீராங்கனைகளின் ஒருமித்த ஒத்துழைப்பே இவ்வெற்றியின் முழுக்காரணமாக அமைந்தது. இந்த வெற்றியின் மூலமாக எதிர்கால விளையாட்டு வீராங்கனைகளுக்கு இந்திய மகளிர் அணி ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்வார்கள் எனக்கூறி, உலகக்கோப்பையை ஈட்டுத்தந்த இந்திய மகளிரணி வீராங்கனைகள் அனைவருக்கும் மீண்டுமொரு முறை என் சார்பிலும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பிலும் பாராட்டுக்களையும் – வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, மேலும் பல சாதனைகள் புரியவேண்டும் என வாழ்த்தி மகிழ்கின்றேன். அன்புடன், டாக்டர் பாரிவேந்தர் நிறுவனர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News