கோவையில் ஒரு இளம்பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து எனது ஆழ்ந்த வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மனித நேயம், மரியாதை மற்றும் பெண்களின் பாதுகாப்பு ஆகியவை சமூகத்தின் அடிப்படைக் குணாதிசயங்களாக இருக்க வேண்டும். ஆனால், இவ்வாறான கொடூரச் செயல்கள் அந்த மதிப்புகளை மிதித்து எரிக்கும் விதமாக இருக்கின்றன. அந்த இளம்பெண்ணுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஆறுதல் தெரிவித்துக்கொள்கின்றேன். குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனை பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பு குறித்து அரசு சிறப்புக் குழுக்களை அமைத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும். பெண்கள் நிம்மதியாக வாழக்கூடிய சமுதாயத்தை உருவாக்குவது அனைவரது கடமையும் பொறுப்புமாகும். எங்கள் கட்சி இதுபோன்ற அநீதி சம்பவங்களுக்கு எதிராக எப்போதும் குரல் கொடுத்து வருவது போல, இதற்கும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறது. வருத்தங்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்தி ய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies