Loading...

செய்திகள்

Nov 07, 2025
News Image

“ஊர்வலம் – பொதுக்கூட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் ஜனநாயக உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அறிக்கை

கரூர் தமிழக வெற்றிக்கழகத்தின் ‘ரோடுஷோ’ - வில் 41 பேர் உயிரிழந்தது போல மீண்டும் நிகழாமல் இருக்க, புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சமீபத்தில் அறிவுறுத்தியுள்ளது. நேற்று (6.11.2025) அனைத்துக் கட்சி கூட்டத்தில் பல்வேறு பரிந்துரைகளை அரசு வழங்கியுள்ளது. குறிப்பாக, 5000 நபர்களுக்கு கூடுதலாக கூடும் பொதுக்கூட்டங்கள் – ஊர்வலம் – ரோடு ஷோ – ஆர்ப்பாட்டம் – போராட்டம் – மத கலாச்சார வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு கட்டணங்களை வகுத்துள்ளது. இது அரசியல் அமைப்புச் சட்டம் மக்களுக்கு, அரசியல் கட்சிகளுக்கு வழங்கியுள்ள ஜனநாயக உரிமைகளை பாதிக்கும் செயலாகும். நீதிமன்ற வழிகாட்டுதல்களைக் காரணம் காட்டி எதிர்கட்சிகளை ஒடுக்கும் திட்டமிட்ட அடக்குமுறை வன்மையான கண்டனத்திற்குரியது. ஜனநாயகக் குரலை ஒலிப்பதற்கு கட்டணம் வசூலிப்பது எங்கும் கண்டிராத ஒன்று. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அரசு பயங்கரவாதம், பொதுமக்களின் ஜனநாயக உரிமை மீது நடத்தப்பட்டுள்ளது. இதனை அரசு செயல்படுத்தினால் போராடிப் பெற்ற ஜனநாயக உரிமைகள் முற்றிலும் பாதிக்கப்படும். எனவே அரசு வகுத்துள்ள இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தக்கூடாது என இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம். அன்புடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News