மயிலாடுதுறை மாவட்டம் அரசலங்குடி பகுதியில் போதையில் இருந்ததாகக் கூறப்படும் நபர்கள் சிலர் பள்ளிப் பேருந்தைத் தாக்கியதாக வரும் அந்த காணொளியை பார்க்கும் போது நெஞ்சை பதைபதைக்கச் செய்கிறது. பேருந்து மீதான தாக்குதலில் குழந்தைகளுக்கு ஏதாவது ஆகியிருந்தால் நிலைமை என்னவாகி இருக்கும். நினைத்து பார்க்கவே அதிர்ச்சியளிக்கிறது. ஒரு பள்ளிப் பேருந்து கூட சாலையில் பாதுகாப்பாக செல்ல முடியாத அளவிற்கு இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. இளைஞர்கள் அதிக அளவில் போதைப்பழக்கத்திற்கும், மதுப் பழக்கத்திற்கும் ஆளாகி இருப்பது கொடுமையிலும் கொடுமை. இந்த போதைப்பொருள் பயன்பாடுகளைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். மயிலாடுதுறை பள்ளிப் பேருந்து மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றேன். அன்புடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies