Loading...

செய்திகள்

Nov 10, 2025
News Image

மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் கடத்தப்பட்ட 5 தமிழர்களை உடனடியாக மீட்டு இந்தியாவிற்கு அழைத்துவர ஆவனசெய்யவேண்டும் மத்திய – மாநில அரசுகளுக்கு IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அறிக்கை

மேற்கு ஆப்பிரிக்க நாடு மாலியில் 5 தமிழக இந்தியர்கள் ஆயுதம் தாங்கிய பயங்கரவாத அமைப்புகளால் கடத்தப்பட்டுள்ளனர். அயல்நாட்டினர் மீது தாக்குதல் நடத்துவதும், கடத்தப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. நேற்றைய முன்தினம் மேற்கு ஆப்பிரிக்கா மாலியில் உள்ள கோப்ரி அருகே வனப்பகுதியில் நுழைந்த ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று 5 தமிழக இந்தியர்களை துப்பாக்கி முனையில் கடத்திச்சென்றுள்ளனர். தமிழர்கள் மாலியில் மின்மயமாக்க பணிக்காக சில மாதங்களுக்கு முன் சென்றுள்ளனர். இந்த கடத்தல் நிகழ்வை அடுத்து, அந்நிறுவனத்தில் பணியாற்றிய மற்ற இந்தியர்கள் அந்நாட்டு தலைநகர் பமாகோ-விற்கு பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டுள்னர். தூத்துக்குடி மாவட்டம் கொடியன்குளத்தைச் சேர்ந்த புதியவன் (52), நாரைக்கிணறு பொன்னுத்துரை (41), வேப்பங்குளம் பேச்சிமுத்து (42) தென்காசி முத்துகிருஷ்ணாபுரம் இசக்கிராஜா (36), புதுக்குடி தளபதி சுரேஷ் (26) ஆகிய ஐவரும், “DRAWING RAIL LIGHTING” என்ற நிறுவனத்தில் மின்மயமாக்கல் பணியில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பணியில் இருந்த சுமார் 100 பணியாளர்கள் இந்தியா வந்தடைந்தனர். கடத்தப்பட்ட மேற்குறிப்பிட்ட ஐவரையும் மீட்டு இந்தியாவிற்கு பாதுகாப்பாக அழைத்து வர மத்திய - மாநில அரசுகள் உடனடியாக ஆவனசெய்யவேண்டும். மேலும், மாவட்ட ஆட்சியாளர்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து நம்பிக்கையூட்ட வேண்டும். அதுமட்டுமின்றி, கிழக்கு ஆப்பிரிக்காவில் மின்மயமாக்கல் பணியில் ஈடுபட்டுள்ள 18 தமிழர்களையும் பாதுகாப்பாக இந்தியாவிற்கு அழைத்துவர ஏற்பாடு செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம். அன்புடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News