Loading...

செய்திகள்

Nov 11, 2025
News Image

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல் – IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அறிக்கை

டெல்லியில் ஏற்பட்ட கார் வெடிப்பு சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் துயரத்தையும் அளித்துள்ளது. அச்சம்பவத்தில் பலர் உயிரிழந்ததும், சிலர் தீவிரமாக காயமடைந்ததும் கவலைக்குரியதாகும். மனித உயிர்களை பலிகொண்ட இத்துயரச் சம்பவம் அர்த்தமற்ற வன்முறையின் ஒரு வெளிப்பாடாகும். இந்நிகழ்வில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தோர் விரைவில் நலம்பெற வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன். இந்தச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் விரைவில் கண்டறியப்பட்டு கடுமையாகச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அத்துடன், எதிர்காலத்தில் இத்தகைய துயரச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அரசு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன். வருத்தங்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News