தமிழர் திருநாளான பொங்கல், உழைப்பை போற்றும் திருநாள். உழவர் பெருமையை உலகிற்கு உணர்த்தும் திருநாள். சூரியன், மண், நீர், உழைப்பு ஆகியவற்றுக்கு நன்றி கூறும் இந்தப் பொங்கல் பண்டிகை, தமிழ் சமுதாயத்தின் பண்பாட்டுச் சிறப்பையும் - ஒற்றுமையின் அடையாளத்தையும் வெளிப்படுத்துகிறது. விவசாயிகளின் வியர்வை துளிகளால் செழித்த இந்த மண், நாட்டின் பொருளாதாரத்திற்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் அடித்தளமாக விளங்குகிறது. உழவர்களின் வாழ்வு வளம்பெற வேண்டும் என்பதே எங்கள் உறுதியான இலக்கு. இந்த இனிய பொங்கல் திருநாளில், அனைத்து மக்களின் வாழ்விலும் நலம், வளம், அமைதி, முன்னேற்றம் பொங்கிப் பெருக வேண்டும் என எனது சார்பிலும் இந்திய ஜனநாயக கட்சி சார்பிலும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றேன்.. இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்…! வாழ்த்துக்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies