Loading...

செய்திகள்

Feb 24, 2026
News Image

மக்களே என் சக்தி என்ற நம்பிக்கையுடன் மக்கள் நலனையே முதன்மையாகக் கொண்டு செயல்பட்டவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அறிக்கை

தமிழக அரசியலில் அழியாத தடம் பதித்த புரட்சித் தலைவி அம்மா, மறைந்த முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு எனது அன்பும் - மரியாதையும் கலந்த புகழஞ்சலியை தெரிவித்துக் கொள்கின்றேன். அம்மா அவர்கள் தன்னம்பிக்கை, துணிச்சல் மற்றும் உறுதியான தலைமையின் மூலம் தமிழக மக்களின் இதயத்தில் நிலைத்த இடத்தைப் பெற்றவர். சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம், ஏழை மக்களின் உயர்வு ஆகியவற்றை தனது ஆட்சிக் காலத்தில் பல திட்டங்கள் மூலம் செயல்படுத்தியவர். “மக்களே என் சக்தி” என்ற நம்பிக்கையுடன் மக்கள் நலனையே முதன்மையாகக் கொண்டு செயல்பட்டவர். அவரது பிறந்தநாள் நமக்கு ஒரு நினைவுநாள் மட்டுமல்ல... அர்ப்பணிப்பு, ஒழுக்கம், உறுதி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாள்... அவரின் சேவைகள் என்றும் தமிழக அரசியல் வரலாற்றில் பொற்குறிப்பாக நிலைத்திருக்கும். அம்மா அவர்கள் காட்டிய பாதையில் சமூகநலனும், நல்லாட்சியும் நிலைத்திட அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். அவரது புகழ் என்றும் நிலைக்கட்டும்!. வாழ்த்துக்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News