value="உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து மகளிருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் பெண்கள் ஒரு குடும்பத்தின் அடித்தளம் மட்டுமல்ல; சமூக முன்னேற்றத்தின் சக்தியாகவும், நாட்டின் வளர்ச்சியின் முதுகெலும்பாகவும் விளங்குகின்றனர். தாய், சகோதரி, மகள், துணைவி என பல்வேறு வடிவங்களில் அன்பையும் அர்ப்பணிப்பையும் வழங்கி மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கு மகளிர் அளிக்கும் பங்கு அளப்பரியது. இன்றைய காலத்தில் கல்வி, அரசியல், அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்கள் திறமையால் உயர்ந்து, சமூகத்திற்கு முன்மாதிரியாக திகழ்கின்றனர். அவர்களின் சாதனைகள் புதிய தலைமுறைக்கு ஊக்கமாக உள்ளன. பெண்கள் பாதுகாப்பாகவும், சமத்துவமாகவும், தன்னம்பிக்கையுடன் வாழும் சமூகத்தை உருவாக்குவது ஒவ்வொருவரின் பொறுப்பாகும். மகளிரின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, அவர்களின் கனவுகள் நனவாகும் ஒரு சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதி மேற்கொள்ள வேண்டிய நாள் இதுவாகும். இந்நன்நாளில், அனைத்து மகளிரும் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் வெற்றியுடன் வாழ என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துக்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK) "
Powered by iPOT Technologies