Loading...

செய்திகள்

Mar 12, 2026
News Image

சின்னஞ்சிறு பெண் குழந்தைகள் முதல் மூதாட்டி வரை தினம் தினம் எதிர்கொள்ளும் பாலியல் வன்கொடுமைகளையும் – கொடூரக்கொலைகளையும் முடிவுக்கு கொண்டுவர கடுமையான தண்டனைகள் வழங்கப்படவேண்டும் விளாத்திகுளம் பள்ளி மாணவி வன்கொடுமை கொலைக்கு IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து கண்டனம்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியாகவும் - சொல்லொண்ணா மனவேதனையாக உள்ளது. 17 வயது பள்ளி மாணவிக்கு நேர்ந்த இந்த கொடூரமான படுகொலைச் செய்தியைக் கேட்கும்போது. பெண் குழந்தைகளும், சகோதரிகளும் தினசரி இத்தகைய வன்முறைகளை எதிர்கொள்வது மிகுந்த மனவலியைத் தருகிறது. திருச்சியிலிருந்து சென்னை வந்த கல்லூரி மாணவி - மதுராந்தகம் 14 வயது பள்ளி மாணவி – நாமக்கல் 7 வயது சிறுமி – கிருஷ்ணகிரி 2 1/2 வயது பெண்குழந்தை மட்டுமல்லாது 70 வயது மூதாட்டி உட்பட, சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் வயதான மூதாட்டி வரை தினம்தினம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி சிதைக்கப்பட்டும் – கொல்லப்பட்டதாக வரும் செய்திகள் நெஞ்சை பதைபதைக்கச் செய்கின்றது. தினந்தோறும் இந்த பாலியல் வன்கொடுமைகள் செய்திகள் வந்துகொண்டேயிருப்பது மிகுந்த அதிர்ச்சியும் – வேதனையும் அளிக்கின்றது. இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தமிழக காவல்துறை உடனடியாகக் கண்டறிந்து, விரைந்து கைது செய்து மீண்டும் இதுபோன்ற கொடுஞ்செயல்கள் நடைபெறாமல் இருக்க, தவறிழைக்கும் அனைவருக்கும் பாடமாக அமைய கடுமையான தண்டனையை வழங்கவேண்டும் எனக் கேட்டுகொள்வதோடு, உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்குத் எனது சார்பிலும் – இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். வருத்தங்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News