Loading...

செய்திகள்

Mar 20, 2026
News Image

“செல்வ வளம் என்பது அதிகமான செல்வத்தை சேர்ப்பதல்ல, போதுமென்ற மனதைப் பெறுவதே உண்மையான செல்வம்” என்ற வாழ்க்கை நெறிகளை இஸ்லாம் சமுதாயத்திற்கு மட்டுமல்லாமல் மனித சமுதாயம் அனைத்திற்கும் போதித்தவர் இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து ரமலான் திருநாள் வாழ்த்து”

இஸ்லாமின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரமலான் நோன்பு இருப்பது ஒரு கடமையாகும். மனிதகுலத்திற்கு வழிகாட்டியாக விளங்கும் இறைத் தூதர் நபிகள் நாயகம் அருளிய போதனைகளை மனதில் நிறுத்தி, உடலையும், உள்ளத்தையும் ஒருநிலைப்படுத்தி, தூய்மை உணர்வோடு புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து, ஈகையின் சிறப்பினை எல்லோருக்கும் உணர்த்தும் வகையில், ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை எளியோருக்கு அளித்து, அனைவரும் இன்புற்று வாழ்ந்திட வேண்டி இறைவனை தொழுது, இஸ்லாமியப் பெருமக்கள் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். ஏழ்மையை அறிந்து கொள்ளவும், பசியின் கொடுமையை உணர்ந்து கொள்ளவும், உடல் நலத்தை பேணிக்காத்து மனிதர்களை மேம்படுத்துவதுதான் இந்த புனித ரமலான் நோன்பின் சிறப்பாகும். “செல்வ வளம் என்பது அதிகமான செல்வத்தை சேர்ப்பதல்ல, போதுமென்ற மனதைப் பெறுவதே உண்மையான செல்வம்” என்ற வாழ்க்கை நெறிகளை இஸ்லாம் சமுதாயத்திற்கு மட்டுமல்லாமல் மனித சமுதாயம் அனைத்திற்கும் பொருந்தும் வாழ்க்கை நெறியைப் போதித்த, இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் நெறிகளை அனைவரும் பின்பற்றி வாழவேண்டும் எனக்கூறி, அனைத்து இஸ்லாமிய சகோதர – சகோதரிகளுக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் என்னுடைய புனித ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். வாழ்த்துக்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News