Loading...

செய்திகள்

May 10, 2026
News Image

தமிழ்நாட்டின் 13-ஆவது முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு . இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து வாழ்த்து

நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களின் மிகப்பெரிய ஆதரவைப் பெற்று, தமிழ்நாட்டின் 13-ஆவது முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு மனமாரந்த வாழ்த்துக்கள். 1967-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் மட்டுமே ஆட்சி செய்து வந்த நிலையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வரலாற்றுச் சாதனையைப் படைத்து, ஆட்சியை அமைத்திருப்பது தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்பமாக அமைந்துள்ளது. இந்த வெற்றி என்பது ஒரு அரசியல் கட்சியின் வெற்றி மட்டுமல்ல, மாற்றத்திற்காக காத்திருந்த மக்களின் நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்பிற்கும் கிடைத்த வெற்றியாகும். தமிழக மக்கள் வழங்கியுள்ள இந்த மகத்தான ஆணையை மதித்து, மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டு செயல்படும் வெளிப்படையான, ஊழல் இல்லாத, ஜனநாயகப் பண்புகளைக் காக்கும் நல்லாட்சியை தமிழக வெற்றிக் கழகம் வழங்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம், தொழில் வளர்ச்சி, பெண்கள் பாதுகாப்பு, இளைஞர் முன்னேற்றம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழக அரசு சிறப்பான திட்டங்களை கொண்டு வந்து மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட வேண்டும் என்றும், சமூக நீதி மற்றும் சமத்துவக் கொள்கைகளை நிலைநிறுத்தும் ஆட்சியாக திகழ வேண்டும் என இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் மனமார வாழ்த்துகின்றோம். அன்புடன், (டாக்டர் ரவி பச்சமுத்து) தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News