அஇஅதிமுக பொதுச்செயலாளரும் – மேனாள் முதல்வர் - முன்னாள் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் – எடப்பாடி சட்டமன்றத்தொகுதி உறுப்பினர் அன்புச்சகோதரர் எடப்பாடியார் அவர்களின் பிறந்த நாளில் அவரை வாழ்த்தி மகிழ்கின்றோம். விவசாயக் குடும்பத்தில் பிறந்த மிக எளிமையான மனிதர். தனது இருபது வயதில், அரசியலில் ஒரு சாதாரண அதிமுக தொண்டராக நுழைந்து, தனது உழைப்பால் படிப்படியாக முன்னேறி முதல்வர் வரை பொறுப்புகள் வகித்த பெருமைக்குரியவர். புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் மறைவுக்குப் பின்னர் கழகத்தில் ஏற்பட்ட பல இடர்களை சமாளித்த பெருமைக்குரிய அண்ணன் எடப்பாடியார் அவர்கள் இன்று 72-ம் பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில், பூரண உடல்நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து பொதுவாழ்வு பணியாற்றவேண்டும் என எனது சார்பிலும் – இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பிலும் மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். வாழ்த்துக்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies