முத்தரையர் மன்னர்களில் மிகச்சிறந்த ஒருவர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் அவர்கள். தனது 30 வயதில், கி.பி. 705 முதல் 745 வரை தஞ்சாவூரை ஆட்சி செய்த பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்திரையர் அவர்களின் 1351 வது சதய விழா இன்று கொண்டாடப்படுகின்றது. தொடர்ந்து 16 பெரும் போர்களில் வாகைப்பூ சூடி வெற்றி பெற்று ஆட்சிபுரிந்த இவருடைய சிலை, முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களால் 1996-ல் நிறுவப்பட்டு, 2002-ஆம் ஆண்டு முதல் இந்த விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் சதயவிழாவைக் கொண்டாடும் அனைவருக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பிலும் – எனது சார்பிலும் வாழ்த்துக்களையும் – மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கின்றேன். வாழ்த்துக்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies