value="value="உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் புனித பக்ரீத் திருநாளை முன்னிட்டு எனது இதயம் கனிந்த இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் மிக முக்கிய தியாகத் திருநாள் ஆகும். இறைவனின் கட்டளைப்படி தன் மகனையே தியாகம் செய்யத் துணிந்த இப்ராஹீம் நபியின் அசைக்க முடியாத நம்பிக்கையையும், தியாகத்தையும் போற்றும் விதமாக இத்திருநாள் கொண்டாடப்படுகிறது. இறைநம்பிக்கை, தியாகம், மனிதநேயம் மற்றும் சகோதரத்துவத்தின் உயர்ந்த எடுத்துக்காட்டாக விளங்கும் புனித பக்ரீத் திருநாள், மனித குலத்திற்கு அன்பும் ஒற்றுமையும் நிறைந்த வாழ்க்கைப் பாதையை எடுத்துரைக்கிறது. இன்றைய சூழலில் மக்கள் மத்தியில் நல்லிணக்கம், பரஸ்பர மரியாதை மற்றும் உதவும் மனப்பான்மை மேலும் வலுப்பெற வேண்டும் என்பதையே இத்திருநாள் நமக்கு உணர்த்துகிறது. ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்து, அனைவருடனும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதன் மூலம் சமூக ஒற்றுமையை நிலைநாட்டும் உயரிய பண்பை பக்ரீத் திருநாள் எடுத்துக்காட்டுகிறது. அனைவருக்கும் இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை எனது சார்பிலும் மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்த்துக்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)""
Powered by iPOT Technologies