value="தமிழ் திரையுலகின் பெருமைமிகு படைப்பாளரும், இயக்குநர் இமயம் எனப் போற்றப்படும் பாரதிராஜா அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த துயரமும் வேதனையும் அடைந்தேன். 1977 ஆம் ஆண்டு வெளிவந்த 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கிய பாரதிராஜா அவர்கள், கிழக்கே போகும் ரயில் - அலைகள் ஓய்வதில்லை - முதல் மரியாதை - மண் வாசனை – கருத்தம்மா - கிழக்கு சீமையிலே உள்ளிட்ட எண்ணற்ற படைப்புகள் மூலம் தமிழ் மண்ணின் பண்பாடு, கிராமிய வாழ்க்கை மற்றும் மனித உணர்வுகளை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்தார். பல தேசிய மற்றும் மாநில விருதுகளைப் பெற்று தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்ததோடு, நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பலரை அறிமுகப்படுத்தி வளர்த்த பெருமையும் அவருக்கே உரியது. அவரது படைப்புகள் வெறும் திரைப்படங்களாக அல்லாமல், தமிழர் வாழ்வியலின் ஆவணங்களாக என்றும் நிலைத்திருக்கும். மண்ணின் மணத்தை உலகம் அறியச் செய்த கலைஞன் மறைந்தாலும், அவர் விதைத்த கலை, படைப்புகள் என்றென்றும் வாழும். தமிழ் மண்ணின் இதயத்துடிப்பாக என்றும் ஒலிக்கும். இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பிலும், எனது சார்பிலும், ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரின் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற வேண்டுகின்றேன். வருத்தங்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK) "
Powered by iPOT Technologies