வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி காவிரி டெல்டா விவசாயிகளின் குறுவை சாகுபடிக்காக திறக்கப்படும் மேட்டூர் அணை, இந்த ஆண்டு திறக்கப்படாதிருப்பது மிகுந்த கவலையையும் - ஏமாற்றத்தையும் அளிக்கிறது. நீர்மட்டக் குறைவு காரணமாக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் உணவுப் பாதுகாப்பிற்கும், டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் முதுகெலும்பாக விளங்கும் குறுவை சாகுபடி, மேட்டூர் அணை நீர் திறப்பையே பெரிதும் சார்ந்துள்ளது. அணை திறப்பு தாமதமாவதால் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பையும், மன உளைச்சலையும் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நேரடியாகவும், மறைமுகமாகவும் 50 லட்சம் குடும்பங்கள் காவிரி நீரை சார்ந்துள்ளனர். எனவே, தமிழக அரசு கர்நாடக அரசுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்றுத் தருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதோடு, குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் நீர் திறப்பு அவசியமானதாகும். எனவே, விவசாயிகளின் துயரத்தை தமிழக அரசு உணர்ந்து, விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் உடனடி மற்றும் நிரந்தர தீர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் கேட்டு கொள்கிறேன். அன்புடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies