Loading...

செய்திகள்

Nov 21, 2026
News Image

திருப்பத்தூரில்இரட்டைக் கொலை, பல்லாவரத்தில் இளைஞர் படுகொலைதொடரும்கொலைச் சம்பவங்களைத் தடுத்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யதமிழகஅரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்... IJKதலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து வலியுறுத்தல்

திருப்பத்தூரில் இரட்டைக் கொலை, பல்லாவரத்தில் இளைஞர் படுகொலை தொடரும் கொலைச் சம்பவங்களைத் தடுத்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்... IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து வலியுறுத்தல் திருப்பத்தூர் அருகே தோரணம்பதி பகுதியில் ஆண், பெண் என இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதும், சென்னை பல்லாவரம் அருகே அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த மயான ஊழியர் ஆகாஷ் என்ற இளைஞர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதும் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. அடுத்தடுத்து வெளியாகும் இத்தகைய கொலைச் சம்பவங்கள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த பெரும் கவலையை ஏற்படுத்துகின்றன. கொலைச் சம்பவங்கள் நடைபெற்ற பின்னர் குற்றவாளிகளைக் கைது செய்வதோடு காவல்துறையின் பணி முடிந்துவிடக் கூடாது. குற்றங்கள் நிகழ்வதற்கு முன்பே அவற்றைத் தடுக்கும் வகையில் காவல்துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். காவல்துறையின் ரோந்துப் பணிகளை அதிகரித்தல், குற்றப் பின்னணி கொண்டவர்களைக் கண்காணித்தல், சட்டவிரோத ஆயுதப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துதல், அச்சுறுத்தல் தொடர்பான புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும். கொலை உள்ளிட்ட வன்முறைக் குற்றங்களைத் தடுப்பதற்கான உறுதியான செயல் திட்டத்தை வகுத்துச் செயல்படுத்த வேண்டும். மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதே நல்லாட்சியின் அடையாளமாகும். சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் எவ்வித சமரசத்திற்கும் இடமளிக்கக் கூடாது. திருப்பத்தூர் மற்றும் பல்லாவரத்தில் நடைபெற்ற கொலைச் சம்பவங்கள் தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன். வருத்தங்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News