Loading...

செய்திகள்

Nov 24, 2026
News Image

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மீதான புகார்நியாயமான, வெளிப்படையான விசாரணைமேற்கொள்ள வேண்டும்இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர்டாக்டர் இரவிபச்சமுத்து வலியுறுத்தல்..கள்ளக்குறிச்சி தொகுதியின் தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் மீது ஆபாசக் குறுஞ்செய்தி விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த கவலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மீதான புகார் நியாயமான, வெளிப்படையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் டாக்டர் இரவிபச்சமுத்து வலியுறுத்தல்.. கள்ளக்குறிச்சி தொகுதியின் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் மீது ஆபாசக் குறுஞ்செய்தி விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த கவலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பொதுவாழ்வில் கண்ணியத்தையும், பொறுப்புணர்வையும் கடைப்பிடிப்பதோடு, அரசு அதிகாரிகளுடன் பரஸ்பர மரியாதையுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். இவ்விவகாரத்தில் விசாரணை நிறைவடைவதற்கு முன்பாக எந்தவிதமான முடிவுக்கும் வருவது ஏற்புடையதல்ல. அதேவேளையில், மாவட்ட ஆட்சியர் அளித்துள்ளதாகக் கூறப்படும் புகாரின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். எவ்வித அரசியல் தலையீடுமின்றி, நடுநிலையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிக்கொண்டு வருவதற்குத் தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும். அரசு அதிகாரிகள் எவ்வித அச்சமுமின்றி தங்களது பணிகளை மேற்கொள்வதற்கான சூழலை உருவாக்குவதும், பெண்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் உறுதி செய்வதும் அரசின் முக்கியக் கடமையாகும். எனவே, அரசு நிர்வாகத்தின் மீதும் சட்டத்தின் மீதும் பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையில், இவ்விவகாரத்தில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்தி, விசாரணையின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன் அன்புடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News