திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால அனுமதியை நடைமுறைப்படுத்தாத தமிழக அரசின் செயல்பாடு எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அறிக்கை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கியதை, தமிழக அரசு நடைமுறைப்படுத்தாதது மிகுந்த அதிருப்தியையும், வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. நீதிமன்ற உத்தரவுகளை மதித்து நடைமுறைப்படுத்த வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலையாய கடமையாகும். நீதிமன்ற உத்தரவுகளைச் செயல்படுத்துவதில் அரசே தயக்கம் காட்டுவது ஜனநாயகத்திற்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் உகந்ததல்ல. சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது அரசின் கடமை என்றால், நீதிமன்ற உத்தரவுகளுக்கு உட்பட்டு மக்களின் வழிபாட்டு உரிமையைப் பாதுகாப்பதும் அரசின் கடமையே. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு, மத நல்லிணக்கத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தீபம் ஏற்றுவதற்கான சூழலைத் தமிழக அரசு உருவாக்கியிருக்க வேண்டும். ஆட்சி மாற்றம் என்பது வெறும் ஆட்சியாளர்களின் மாற்றமாக மட்டும் இல்லாமல், நிர்வாக அணுகுமுறையிலும் மக்களின் உணர்வுகளை மதிப்பதிலும் பிரதிபலிக்க வேண்டும். அனைத்து மதத்தினரின் நம்பிக்கைகளையும் வழிபாட்டு உரிமைகளையும் சமமாக மதிப்பதே உண்மையான மதச்சார்பின்மையாகும்.. உச்சபட்ச அதிகாரம் படைத்த உச்சநீதிமன்ற தீர்பபை மதிக்காமல், இது போன்ற தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்துவது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, தமிழக அரசு பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். அன்புடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies