தெலுங்கு மற்றும் கன்னடப் புத்தாண்டு விழாவாம் ‘யுகாதி’த் திருநாளை கொண்டாடி மகிழும் அன்பு சகோதர – சகோதரிகளுக்கு எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
பிறக்கின்ற புதிய ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியையும் - மன அமைதியையும் - உடல் நலத்தையும் தரவேண்டும் என்று உளமாற பிரார்த்திக்கின்றேன்.
பன்னெடுங்காலமாக சகோதரப் பற்றுடன் தமிழர்களோடு பாசத்துடன் பழகியும், வாழ்ந்தும் வருகின்ற, மாற்று மொழியினர் அனைவரின் உயர்ந்த பண்புகள் நாளும் தழைத்தோங்கிட, இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் இயன்ற அனைத்தையும் செய்வோம் என்று உறுதியளிக்கின்றேன்.
வாழ்த்துக்களுடன்,
ரவிபச்சமுத்து
தலைவர்
இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies