Loading...

செய்திகள்

Aug 23, 2022
News Image

நாளை 24.08.2022 இளைஞர்களின் எழுச்சி நாளாம் டாக்டர் பாரிவேந்தர் M.P அவர்களின் பிறந்த நாள் விழாவில் IJK நிர்வாகிகள் கலந்துகொள்ள கட்சியின் தலைவர் - டாக்டர் ரவிபச்சமுத்து அவர்கள் அழைப்பு.

நமது அய்யா டாக்டர் பாரிவேந்தர் M.P, அவர்களின் பிறந்தநாள் விழா நாளை 24.08.2022 (புதன்கிழமை) இந்த ஆண்டு சென்னை, காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம். T.P.கணேசன் அரங்கத்தில், மதியம் 3.00 மணியளவில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

இளைஞர்களின் எழுச்சிநாளான டாக்டர் பாரிவேந்தர் M.P அவர்களின் பிறந்த நாள் விழாவில் கட்சியின், மாநில – மண்டல -  மாவட்ட – நகர - ஒன்றிய - பேரூர் பொறுப்பாளர்கள், மற்றும் கட்சியின் அனைத்து அணிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்களும் கலந்துகொண்டு, அய்யாவின் ஆசியை பெற்று விழாவினை சிறப்பிக்க வேண்டும் என இந்திய ஜனநாயகக் கட்சியின் சொந்தங்களான உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

 

 

அன்புடன்,

டாக்டர் ரவிபச்சமுத்து,

தலைவர்,

இந்திய ஜனநாயகக் கட்சி((IJK).

 

Back to News